ஜஸ்பிரித் பும்ரா படம் | AP
கிரிக்கெட்

பும்ரா மீதான அழுத்தம் குறைய இவர் சீக்கிரம் ஆஸ்திரேலியா வரவேண்டும்: ரவி சாஸ்திரி

ஜஸ்பிரித் பும்ரா மீதான பந்துவீச்சு அழுத்தம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

DIN

ஜஸ்பிரித் பும்ரா மீதான பந்துவீச்சு அழுத்தம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முகமது ஷமி ஆஸ்திரேலியா வரவேண்டும்

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இரண்டாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

முகமது ஷமி

இந்த நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மீதான அழுத்தம் குறைய, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விரைவில் ஆஸ்திரேலியா வரவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவிச்சாளர் முகமது ஷமி சீக்கிரம் ஆஸ்திரேலியாவுக்கு வருவது இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். அவர் அதிக அளவிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசும் போதும், மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போதும் எதிரணியின் மீதான அழுத்தத்தை உங்களால் பார்க்க முடியும்.

அதிகப்படியான அழுத்தம் ஜஸ்பிரித் பும்ராவின் மீது உள்ளது. முகமது ஷமி இந்திய அணியுடன் விரைவில் இணைய வேண்டும். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஷமியை விளையாட வைப்பது மிகவும் சீக்கிரமாக விளையாட வைக்கும் முடிவாக இருக்கலாம். ஆனால், மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டிகளில் முகமது ஷமி கண்டிப்பாக விளையாடலாம் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவசியம் பாலின சமத்துவம்!

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலைக் கல்லூரியில் நாளை தொடக்கம்

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

SCROLL FOR NEXT