படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

3-ஆவது டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெறாமலிருக்க இந்திய அணி போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் இன்று(டிச. 17) தொடங்கியது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் 3-ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று(டிச. 17) தொடங்கியது.

டாப், ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடியதால் இந்திய அணி 150 ரன்களைக் கடந்துள்ளது. இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 ரன்களில் நடையைக் கட்டினார். மறுபுறம், சதத்தை தவறவிட்ட ராகுல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு வரும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் விளையாடி உள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி உணவு இடைவேளைக்குப் பின் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

இந்திய அணி 278 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அசத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT