ஜோஷ் ஹேசில்வுட் படம்; ஏபி
கிரிக்கெட்

ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகல்!

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிஜிடி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முழங்கால் தசைப்பிடிப்பு காரணமாக பார்டர் - கவாஸ்கர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள்.

இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. 252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஹேசில்வுட் 2ஆவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட்டின் நான்காம் நாள் முதல் ஓவருக்கு அடுத்து காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஹேசில்வுட் இல்லாததால் ஆஸி. க்கு பந்துவீச்சில் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் இவருக்கு பதிலாக ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

தலைமை காவலா் இடைநீக்கம்

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

SCROLL FOR NEXT