ரோஹித் சர்மா படம்: ஏபி
கிரிக்கெட்

தொடர்ச்சியாக சண்டை செய்ய விரும்புகிறோம்..! ரோஹித் பேட்டி!

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பெருமிதமாகப் பேசியுள்ளார் கேப்டன் ரோஹித்.

DIN

எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என பெருமிதமாகப் பேசியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

பிரிஸ்பேனில் நடைபெற்றுவந்த 3ஆவது டெஸ்ட் மழையின் காரணமாக சமனில் முடிவடந்தது. இதனால், பார்டர் கவாஸ்கர் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 445 ரன்கள் குவிக்க இந்திய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ராகுல், ஜடேஜா அற்புதமாக விளையாடினார்கள்.

ஃபாலோ ஆன் ஆகாமல் இந்திய அணி சிறபாக விளையாடியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:

தொடர்ச்சியாக சண்டை செய்ய விரும்புகிறோம்

எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த மனநிலையில்தான் நாங்கள் சமீபகாலமாக விளையாடி வருகிறோம். நாங்கள் தொடர்ச்சியாக சண்டை செய்ய விரும்புகிறோம்.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போதும் நாங்கள் இதே தீவிரத்தன்மையுடனே பந்து வீசினோம். 60-70 ரன்களில் ஆஸி.யை ஆட்டமிழக்க செய்தோம். ஏனெனில் அவர்கள் ரன்கள் குவிப்பார் என எங்களுக்குத் தெரியும்.

அது எங்களுக்கு வாய்ப்பினை அளித்தது. அதனால் எங்களுக்கு விக்கெட்டுகளும் கிடைத்தன. 50 ஓவர்களில் 270 ரன்களை சேஸ் செய்ய போதுமான நேரம் எங்களுக்கு கிடைக்கவில்லை.

எதிரணிக்கும் அழுத்தம்

எதிரணிக்கும் அழுத்தம் இருந்தது. எதிரணிக்கு அழுத்தம் தராதவரை அவர்கள் அந்த நேரத்தில் எப்படி விளையாடுவார்கள் என்பது தெரியாது. கடைசியாக நாங்கள் இங்கு 320-330 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது அவர்களுக்கு நினைவிருக்கும்.

நாங்கள் அந்த இலக்குகளை சேஸ் செய்ய முடியுமென அவர்களுக்கு தெரியும். இன்று நடந்தது மெல்போர்னில் நடக்கும் போட்டிக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

எப்படியானாலும் நாங்கள் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும். அங்கு பிட்ச் வேறுமாதிரி இருக்கும். இங்கு பந்து திரும்புவதுபோல் அங்கும் திரும்பாது. அதற்கேற்றார்போல் நாங்கள் திட்டமிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT