உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள் படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ
கிரிக்கெட்

உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகள்..! பிசிசிஐ பகிர்ந்த விடியோ!

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி விடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

DIN

இந்திய அணியின் உதவியாளர்களுடன் அஸ்வின் செய்த நகைச்சுவைகளை நினைவூட்டி பிசிசிஐ விடியோ வெளியிட்டுள்ளது.

இந்த விடியோவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பயிற்சியாளர் சோகம் தேசாய், பகுத்தாய்வாளர் ஹரி பிரசாத் மோகன், மருத்துவ உதவியாளர் அருண் கனடே இவர்களுடன் அஸ்வின் செய்த குறும்புத்தனத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆடுகளத்திலும் சரி அதற்கு வெளியேவும் அனைவரிடமும் நன்றாக பழகுபவர் அஸ்வின்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்குப் பிறகு ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளர்களுக்கு பந்துவீச்சி பயிற்சியளித்த விடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அதில், “ஆடுகளத்தில் கணக்கற்ற நினைவுகள் மட்டுமல்ல இதுபோன்ற பல கணங்களும் அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நினைவுகூரப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

38 வயதான அஸ்வின் டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவித்தது மனநிம்மதியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக சென்னை வந்தடைந்த அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT