ஸ்ரேயாஷ் ஐயர்.  
கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

2020இல் ரிக்கி பாண்டிங் தில்லை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்போது இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரிக்கி பாண்டிங் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஷ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறி ஸ்ரேயாஷ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.

அதனால், இவர்தான் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் ஸ்ரேயாஷ் ஐயர் கூறியதாவது:

ரிக்கி பாண்டிங்குடன் பற்றி தெரியும்

ரசிகர்கள் மனநிலை என்னவாக இருக்குமென புரிந்துகொள்ள முடிகிறது. ரிக்கி பயிற்சியாளராக இருக்கிறார். அவருடன் ஏற்கனவே நல்ல நட்புறவு இருக்கிறது. பல விஷயங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து குழுவாக சிந்தித்து செயல்படுவோம். அதை முதல் போட்டியில் இருந்தே செயல்படுத்துவோம்.

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு

பஞ்சாப் அணியில் இணைந்தது மகிழ்ச்சி. அணியில் சேர்வதற்கு காத்திருக்க கடினமாக இருக்கிறது. இந்தாண்டு 2 கோப்பைகளை வென்றிருக்கிறேன். என்னுடைய முதன்மையான நோக்கம் ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்காக வெல்ல வேண்டும்.

சையத் முஷ்டக் அலி கோப்பை வென்றது நம்பமுடியாத உணர்வைக் கொடுத்தது. இதற்காக கடினமான உழைத்திருக்கிறோம். அணியின் வீரர்கள் சிறப்பாக உழைத்தார்கள் என்றார்.

தற்போது விஜய் ஹசாரோ கோப்பையில் விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT