முகப்பு
ஹர்லீன் தியோல்
கிரிக்கெட்

சதம் விளாசிய ஹர்லீன் தியோல்; மே.இ.தீவுகளுக்கு 359 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

கிரிக்கெட்

சதம் விளாசிய ஹர்லீன் தியோல்; மே.இ.தீவுகளுக்கு 359 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 24 டிசம்பர், 2024 at 11:59 AM
ஹர்லீன் தியோல்
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று (டிசம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சதம் விளாசிய ஹர்லீன் தியோல்

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, பிரதீகா ராவல் மற்றும் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.

பிரதீகா ராவல் 86 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக சதம் விளாசி அசத்தினார். அவர் 103 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது. 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →