கிரிக்கெட்

மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புப் பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்...

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) தொடங்கியது.

இந்த நிலையில், மைதானத்துக்கு பீல்டிங் செய்ய வந்த இந்திய அணியினர் அனைவரும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து வந்தனர்.

வீரர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிசிசிஐ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள் தங்களின் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT