வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி படம்: பிடிஐ
கிரிக்கெட்

நிதீஷ் சதம், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்: ஃபாலோ-ஆனை தவிர்த்த ஆல்-ரவுண்டர்கள்!

ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 3ஆம் நாள் முடிவில் 358 ரன்கள் குவித்துள்ளது.

DIN

மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

நிதீஷ் குமார் ரெட்டி 176 பந்துகளில் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள். 221/7இல் இருந்து 348/8வரை சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிட்டதக்கது.

வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் தற்போது மழை பெய்வதனால் நிறுத்தப்பட்டு பின்னர் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸி. சார்பில் கம்மின்ஸ், போலாண்ட் தலா 3 விக்கெட்டுகளும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இடையே 2 முறை மழை குறுக்கிட்டதால் அதிகமான நேரம் இந்திய அணி பேட்டிங் செய்யவேண்டியதில்லை. அது இந்திய அணிக்கு ஓரளவுக்கு சாதகமாக அமைந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. 2 நாள்கள் மீதமுள்ள நிலையில் இந்தப் போட்டியும் சமனில் முடிவடைய வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டு

ஜெய்ஸ்வால் - 82

ரோஹித் சர்மா - 3

கேஎல் ராகுல் - 24

விராட் கோலி - 36

ஆகாஷ் தீப் - 0

ரிஷப் பந்த் - 28

ஜடேஜா - 17

நிதீஷ்குமார் ரெட்டி - 105*

வாஷிங்டன் சுந்தர் - 50

பும்ரா - 0

சிராஜ் -2 *

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT