இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!
இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது முதல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
நிதீஷ் ரெட்டி 176 பந்துகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார். போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்படுள்ளது.
ஆஸி. மண்ணில் இளம் வயதில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், ரிஷப் பந்த் வரிசையில் 3ஆவது இடம் பிடித்துள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி.
வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி பார்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள். வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம் தற்போது மழை பெய்வதனால் நிறுத்தப்பட்டுள்ளது. 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி மண்ணில் இளம் வயதில் சதமடித்த இந்தியர்கள்
சச்சின் - 18 வருடம் 256 நாள்கள் (1992)
ரிஷப் பந்த் - 21 வயது 92 நாள்கள் (2019)
நிதீஷ்குமார் ரெட்டி- 21 வருடம் 216 நாள்கள் (2024)
தட்டு படேகர் - 22 வருடம் 46 நாள்கள் (1948)