ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா!

மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, மனதளவில் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும், அணியின் பிரச்னைகளை தவிர்த்து தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் எந்த இடத்தில் நின்றேனோ, அதே இடத்தில்தான் இன்றும் நிற்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அணியின் கேப்டனாக இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தத் தோல்வி மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அணியாக நாங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல, தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்திலும் சில விஷயங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்ய முடியும். சிட்னியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

SCROLL FOR NEXT