FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட தடுமாறினேன்; மனம் திறந்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஜூலை 2024, 5:10 pm IST
- படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் (எக்ஸ்)
பகிர்:

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷதாப் கான் தற்போது இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறார். இலங்கை பிரீமியர் லீக்கின் நடப்பு சீசனில் அறிமுகமான ஷதாப் கான், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவர் இதுவரை 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஷதாப் கான் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்தேன். கடைசியாக விளையாடிய 7 சர்வதேசப் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட நான் கைப்பற்றவில்லை. ஆனால், இங்கு முதல் போட்டியிலிருந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். இதுதான் கிரிக்கெட்டின் அழகே. இதுபோன்ற சூழல்களை ஒருவர் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், சில நேரங்களில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், தொடர்ச்சியாக நமது உழைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments