தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் தாய்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பூசாதாம் 40 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, லவோமி அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் ரபியா கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி தாய்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக முர்ஷிதா 50 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.