இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் உபுல் தரங்கா கூறியதாவது: இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவின் ஸ்கேன் முடிவுகள் நேற்றுதான் கிடைத்தது. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதனால், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார் என்றார்.
32 வயதாகும் துஷ்மந்தா சமீரா இலங்கை அணிக்காக 55 டி20 போட்டிகளில் விளையாடி, 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.