ரவி சாஸ்திரி 
கிரிக்கெட்

கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையில் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கௌதம் கம்பீர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களுடன் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடியுள்ளார். வெள்ளைப் பந்து போட்டிகளில் வீரர்கள் பலரும் எப்படி விளையாடுவார்கள் என்பது கௌதம் கம்பீருக்குத் தெரியும். கௌதம் கம்பீர் சரியான வயதில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இளமையாகவும் இருக்கிறார்.

அவர் புதிய யோசனைகளை செயல்படுத்துவார். அதனால், இந்திய அணி புத்துணர்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். அவருக்கு அருமையான இளம் இந்திய அணி அமைந்துள்ளது. அணியின் பயிற்சியாளராக வீரர்களின் வேலைப்பளு மேலாண்மையை திறம்பட கையாள்வது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக, பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதில் அவருக்கு சவால்கள் இருக்கும் என்றார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஜூலை 27) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்!

SCROLL FOR NEXT