படம் | கிரிக்கெட் அயர்லாந்து (எக்ஸ்)
கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மாஸ்வர் 74 ரன்களும், ஜே கம்பி 49 ரன்களும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி மற்றும் ஆண்டி மெக்பிரின் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்க் அடாய்ர் 2 விக்கெட்டுகளையும், கிரைக் யங் மற்றும் கர்டிஸ் காம்ஃபர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 26) அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT