சூர்யகுமார் யாதவ் படம் | AP
கிரிக்கெட்

டி20 தொடருக்கு முன்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது...

DIN

அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (ஜூலை 27) முதல் தொடங்குகிறது. கௌதம் கம்பீர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை. அதிரடியான ஆட்டத்தைத் தொடர்வோம். கேப்டன் பொறுப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. கேப்டனாக கூடுதல் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக இருப்பது எனது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

ரோஹித் சர்மாவிடம் நான் கற்றுக் கொண்டது இதுதான். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியேயும் அவர் சிறந்த தலைவராக செயல்படக் கூடியவர். அவர் கேப்டன் மட்டுமின்றி சிறந்த தலைவராகவும் செயல்படுபவர். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும், எப்படி தொடரை வெல்ல வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT