படம் | AP
கிரிக்கெட்

இந்தியாவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசி. எழுப்பிவிட்டது: ஆஸி. வீரர்

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பிவிட்டது.

DIN

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக இழந்தது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மோசமான தோல்வி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

நம்பிக்கை உடைந்திருக்கும்

நியூசிலாந்துக்கு எதிராக ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி இந்திய அணியின் நம்பிக்கையை உடைத்திருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஸ் ஹேசில்வுட்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்தியாவுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை எழுப்பியிருக்கும். அந்த மிருகம் எப்போது வெளிவரும் என்பதை பார்க்க வேண்டும். சொந்த மண்ணில் 3-0 என தொடரை இழந்ததால், இந்திய அணியின் நம்பிக்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். இந்திய அணி முழுமையாக தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணிக்கு உதவியாக இருக்கும்.

நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் அருமையாக விளையாடினார்கள். இந்திய மண்ணில் 3-0 என தொடரைக் கைப்பற்றுவது நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினம். அப்படியிருக்க, 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது மிகப் பெரிய விஷயம் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT