ஆடுகளத்தைவிட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப். படங்கள்: எக்ஸ் / ஃபேன்கோட்
கிரிக்கெட்

ஆடுகளத்தைவிட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்பை எச்சரித்த தலைமைப் பயிற்சியாளர்!

மே.இ.தீவுகள் அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆடுகளத்தைவிட்டு வெளியேறியதுக்கு பயிற்சியாளர் கணடனம்.

DIN

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆடுகளத்தைவிட்டு வெளியேறியதுக்கு பயிற்சியாளர் கணடனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போடிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என மே.இ.தீ. அணி வெற்றி பெற்றது.

3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீ. அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டனுடன் வாக்குவாதம்

இந்தப் போட்டியில் மே.இ.தீ. அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப் 4ஆவது ஓவரில் ஃபீல்டிங் அமைப்பது குறித்து கேப்டனுடன் (ஷாய் ஹோப்) கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த ஓவரில் விக்கெட் எடுத்தும் அவர் அதைக் கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிந்ததும் 5ஆவது ஓவரில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். 10 ஃபீல்டர்களுடன் மே.இ.தீ. அணி விளையாடியது.

பின்னர் கோபம் தணிந்த பிறகு 6ஆவது ஓவரில் ஆடுகளத்துக்கு வந்தார் அல்ஜாரி ஜோசப். இந்தப் போட்டியில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இது குறித்து மே.இ.தீ. அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி கூறியதாவது:

இந்தமாதிரியான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. நாம் நண்பர்களாக இருக்க வேண்டும். நான் உருவாக்கும் கலாசாரத்தில் இது ஏற்கதக்கதல்ல. இது குறித்து நிச்சயமாக நாங்கள் பேசுவோம்.

ஒழுக்கம் அவசியம்

கடினமான பேச்சுவார்த்தைகளை நான் நடத்தியுள்ளதற்காக பெருமைபடுகிறேன். ஆனால், அணியில் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை சரியாக புரிந்துகொண்டார்கள். அணியின் வீரர்கள் சரியான பாதைக்கு மெதுவாக முன்னேறியுள்ளதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

அணியில் ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் உருவாக்குவதுதான் முக்கியமான குறிக்கோள். ஆனால், இன்னும் சில வேலைகள் செய்யவேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணியுடன் விளையாடவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT