மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிராவிஸ் ஹெட் 
கிரிக்கெட்

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் டிராவிஸ் ஹெட்!

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆஸி. தடுமாற்றம்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெஸ்ஸிகா டேவிட் ஹெட் தம்பதிக்கு கடந்த திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஹாரிஸன் ஜார்ஜ் ஹெட் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தத் தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு மிலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜெஸ்ஸிகா டேவிட்டை டிராவிஸ் ஹெட் திருமணம் செய்துகொண்டார்.

அல்ஜாரி ஜோசப் 2 போட்டிகளில் விளையாட தடை!

டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹெட் பிக்-பாஸ் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஹெட் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் டிராவிஸ் ஹெட்டும் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. தனக்கு குழந்தை பிறந்துள்ளதால் அந்தத் தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட் விலகியிருந்தார்.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 137 ரன்கள் விளாசி கோப்பை வெல்ல உதவினார். அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இருபோட்டிகளிலும் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகள்: 163க்கு ஆல் அவுட்டான ஆஸி.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT