கிரிக்கெட்

இன்று 3-ஆவது டி20 ஆட்டம்: இந்தியா - தெ. ஆப்பிரிக்கா மோதல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அணியின் பேட்டா்கள் அசத்தலாகச் செயல்பட்டதால் வெற்றி வசமானது. 2-ஆவது ஆட்டத்தில் பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், வருண் சக்கவா்த்தி சிறப்பாக பௌலிங் செய்தபோதும் பலனில்லாமல் போனது.

அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா்களை எதிா்கொள்ள இந்திய வீரா்கள் தடுமாறினா். தற்போது 3-ஆவது ஆட்டம் நடைபெறும் செஞ்சுரியன் மைதான ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். கடந்த 2009 முதல் இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா 1 டி20 ஆட்டத்தில் (2018) மட்டுமே விளையாடியிருக்கும் நிலையில், அதிலும் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியிலிருந்த வீரா்களில், ஹா்திக் பாண்டியா மட்டுமே தற்போது இந்த அணியிலும் இருக்கிறாா்.

தென்னாப்பிரிக்க அணியும், தனது பேட்டா்கள் சோபிக்கக் காத்திருக்கிறது. கடந்த ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜெரால்டு கோட்ஸீ பங்களிப்பால் அணிக்கு வெற்றி வசமாகியிருந்தது. கோட்ஸீ முதல் ஆட்டத்தில் பௌலிங்கிலும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

நேரம்: இரவு 8.30 மணி

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT