முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டம் பற்றி...

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 2:01 PM
ஆப்கானிஸ்தான்! - ANI
பகிர்:

டி20 உலகக்கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில், ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிப். 2 - பிப். 6 வரை மொத்தம் 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானை எதிர்த்து ஸ்காட்லாந்து களம் கண்டது. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 61 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், இந்தியா ஏ அணியை எதிர்த்து விளையாடும் அமெரிக்கா 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸிங் செய்து வருகிறது.

summary

Afghanistan vs Scotland, 1st Match, ICC Men's T20 World Cup Warm up Matches 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.