டி20 உலகக்கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா ஏ அணி 238 ரன்கள் குவித்தது. டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிப். 2 - பிப். 6 வரை மொத்தம் 16 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-ஆவது பயிற்சி ஆட்டத்தில், உலக சாம்பியன் இந்தியாவை எதிர்த்து கத்துக்குட்டி அணியான அமெரிக்கா களம் கண்டது. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய அணியில், அதிகபட்சமாக தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் சதமடித்தார். அவர் 55 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் அடங்கும்.
கேப்டன் ஆயுஷ் பதானி 60 ரன்களைக் குவித்தார். அடுத்து சேஸிங் செய்யும் அமெரிக்கா, 239 ரன்களைத் திரட்டப் போராடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.