இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன. 14) நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே. எல். ராகுல் சதமடித்து அசத்தினார். கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் கடந்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் திரட்டியது.
அடுத்து இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 286 ரன்கள் திரட்டியது. இதன்மூலம், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அந்த அணியில் டேரில் மிட்செல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். வில் யங் சிறப்பாக விளையாடி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.