கிரிக்கெட்

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், பிக்-பாஸ் போட்டிகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதையும் படிக்க..: மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தப் போட்டியில் 12 ரன்கள் எடுத்த போது அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த முதல்வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மேக்ஸ்வெல். இவர் 6505 பந்துகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிக்க..:டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிம் சௌதி!

குறைந்த பந்துகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்தவர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT