FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியீடு...

Updated On : 15 நவம்பர் 2024, 8:10 pm IST
ஐபிஎல் கோப்பை - படம் | ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 வீரர்கள் (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உள்பட) வெளிநாட்டு வீரர்கள். இந்திய வீரர்கள் 366 பேரில் 318 பேர் அன்கேப்டு வீரர்கள். வெளிநாட்டு வீரர்களில் 12 பேர் அன்கேப்டு வீரர்கள்.

அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் 81 வீரர்கள் உள்ளனர். ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் 18 வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலையில் 23 வீரர்களும் உள்ளனர்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 1 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments