ஆஸ்திரேலிய அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

ஆஸ்திரேலியா - 147/9

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 28 ரன்களும், மேக்ஸ்வெல் 21 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், சூஃபியான் முக்யூம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கான் அரைசதம் கடந்தார். அவர் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இர்ஃபான் கான் 37 ரன்களும், கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இன்றையப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 18) ஹோபர்ட்டில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT