கிரிக்கெட்

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி இலங்கையில் பல்லெகலேயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மிட்சல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் ராபின்சன் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, அவருக்குப் பின்னர் வந்த வில் யங், ஹென்ட்ரி நிக்கோலஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

21 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது வில் யங் 56 ரன்களுடனும், ஹென்ட்ரி நிக்கோலஸ் 46 ரன்களுடனும் எடுத்திருந்தனர்.

ஆட்டம் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றிருந்தது. இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற வித்தியாத்தில் தொடரை வென்றது.

இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

SCROLL FOR NEXT