விராட் கோலி படங்கள் | பிசிசிஐ
கிரிக்கெட்

நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடுவது தொடர்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

DIN

இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடுவது தொடர்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

மிக முக்கியமான டெஸ்ட் தொடர் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியை பொருத்தவரையில், தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்கு பலம் சேர்க்கிறார். இதுவரை வெறும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 56-க்கும் அதிகமாக உள்ளது.

விராட் கோலியின் அறிவுரை

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக தயாராகி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கியபோது, விராட் கோலி கொடுத்த அறிவுரைகளை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ-யிடம் அவர் பேசியதாவது: மூத்த வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, விராட் கோலியிடம் அவர் எவ்வாறு கிரிக்கெட் பயணத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்கிறார் என்பது குறித்து பேசினேன். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நீண்ட காலத்துக்கு விளையாடடுவதற்கு, நான் எனது தினசரி பழக்கங்களில் மிகுந்த ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என விராட் கோலி கூறினார்.

எனது பழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டுவர விராட் கோலி மிகுந்த ஊக்கமளித்தார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவேன் என எப்போதும் நம்புவேன். பயிற்சிக்கு செல்லும்போது, என்னிடம் எப்போதும் திட்டங்கள் இருக்கும். எனது உணவுப் பழக்கங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT