ஜஸ்பிரித் பும்ரா படம் | AP
கிரிக்கெட்

“உலகின் சிறந்த வீரர்...” ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்!

உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அவரைப் பாராட்டியுள்ளார்.

DIN

உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாராட்டு

முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ராவை, இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லாசித் மலிங்கா பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஜஸ்பிரித் “உலகின் சிறந்த வீரர்” பும்ரா எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT