கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

மீண்டும் கோபமடைந்த கம்பீர்..! அழுத்தத்தில் இருக்கிறாரா?

இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கோபமாக தொப்பியை தூக்கி எறிந்தது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

DIN

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் முடிவில் ஆஸி. அணி 67/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தற்போது, உணவு இடைவேளை வரை விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 100க்கு அதிகமான பந்துகள் விளையாடினார். 67/7 என்றிருந்த ரன்னிலிருந்து 104க்கு கொண்டு சென்றார்.

பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது காமிராவில் காட்டப்பட்ட இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கோபமாக தனது தொப்பியை தூக்கி வீசினார்.

ஏற்கனவே, நியூசிலாந்திடம் வரலாற்று தோல்வியை சந்தித்தபோது திமிராக பேசியது சர்ச்சையானது. முன்னாள் வீரர்கள் பலரும் கம்பீரை அமைதியாக இருக்கும்படிக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்தத் தொடரில் தோல்வியுற்றால் அவரது பயிற்சியாளர் பதவி பறிபோகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக உறுதி: இளைஞரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

பிரதமா், முதல்வா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்: அமித் ஷா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆக. 28-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி முகாம்

SCROLL FOR NEXT