அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்து...
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. இரண்டு நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். அவர் லக்னௌ அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்!
அதிக விலைக்கு ஏலம்போன டாப் 5 வீரர்கள்
1.ரிஷப் பந்த் (ரூ.27 கோடி) - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
2.ஸ்ரேயாஸ் ஐயர் (ரூ.26.75 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்
3.வெங்கடேஷ் ஐயர் (ரூ.23.75 கோடி) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
4.அர்ஷ்தீப் சிங் (ரூ.18 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்
5.யுஸ்வேந்திர சஹால் (ரூ.18 கோடி) - பஞ்சாப் கிங்ஸ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.