படம் | AP
கிரிக்கெட்

கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (நவம்பர் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

சதம் விளாசிய கம்ரான் குலாம்

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் ஆயுப் மற்றும் அப்துல்லா சஃபீக் களமிறங்கினர். சைம் ஆயுப் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அப்துல்லாவுடன் ஜோடி சேர்ந்தார் கம்ரான் குலாம். இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு ரன்கள் சேர்த்தனர். அப்துல்லா சஃபீக் 68 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய கம்ரான் குலாம் சதம் விளாசி அசத்தினார். அவர் 99 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களில் கேப்டன் முகமது ரிஸ்வான் (37 ரன்கள்), சல்மான் அகா (30 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தயாப் தாஹிர் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் ரிச்சர்டு நிகரவா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிளெஸிங் முஸர்பானி மற்றும் ஃபராஸ் அக்ரம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT