கிளென் ஃபிலிப்ஸின் கேட்ச்.  படங்கள்: நியூசிலாந்து கிரிக்கெட் (எக்ஸ்) , ஏபி.
கிரிக்கெட்

பறவையாக பறந்த ஃபிலிப்ஸ்..! வைரலாகும் கேட்ச் விடியோ!

நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிலிப்ஸ் மிகச் சிறப்பாக கேட்ச் செய்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 348க்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் முடிவில் 74 ஓவர்களில் 319/5 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் ஃபிலிப்ஸ் போட்டியின் 53ஆவது ஓவரில் சௌதி ஓவரில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் அடித்த பந்தினை அற்புதமாக தாவி பிடிப்பார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஃபீல்டிங்குக்கு பெயர்போன அணி என்றால் அதில் நியூசிலாந்து நிச்சயமாக இருக்கும். அதிலும் கிளென் ஃபிலிப்ஸ் நம்பமுடியாத அளவுக்கு ஃபீல்டிங் செய்வார்.

இந்தக் காட்சிகளை சோனி லைவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் “இது பறவை, விமானம், இது கிளென் ஃபிலிப்ஸ்” எனக் குறிப்பிட்டு வர்ணித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பிடித்த இந்த கேட்ச் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து அணி 29 ரன்கள் பின்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT