படம் | AP
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கிளன் பிளிப்ஸ் 58 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் மற்றும் பிரைடான் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சதம் விளாசிய ஹாரி ப்ரூக்

இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஹாரி ப்ரூக் சதம் விளாசி அசத்தினார். அவர் 197 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 80 ரன்களும், ஆலி போப் 77 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும் மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

4 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 151 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், நியூசிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 86 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் 31* ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிரைடான் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 4 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT