ஜெயசூர்யா 
கிரிக்கெட்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமிக்கப்பட்டது பற்றி...

DIN

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை நியமித்துள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை, அவர் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா செயல்பட்டு வருகிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது செயல்பாட்டை தொடர்ந்து, முழு நேரப் பொறுப்பை ஜெயசூர்யாவுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை ஒரு நாள் தொடரிலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரிலும் வென்றிருந்தது.

மேலும், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் சமீபத்தில் 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.

இந்த நிலையில், ஜெயசூர்யா முழு நேர தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மேற்கிந்தியத் தீவுகளுடன் வருகின்ற 13-ஆம் தேதி இலங்கை அணி மோதவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ள ஜெயசூர்யா, பின்னர், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT