மலிங்கா பாணியில் பந்துவீசிய ரியான் பராக்..!  படங்கள்: எக்ஸ்,
கிரிக்கெட்

மலிங்கா பாணியில் பந்துவீசிய ரியான் பராக்..! ‘நோ-பால்’ஆக அறிவிக்கப்பட்டது ஏன்?

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரியான் பராக வீசிய பந்து நோ பாலாக அறிவிக்கப்பட்டது.

DIN

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தில்லியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. 

அடுத்து விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் பந்துவீசிய இந்தியர்கள் அனைவரும் விக்கெட் எடுத்து அசத்தினார்கள். இது சாதனையாகவும் மாறியது.

11ஆவது ஓவரை வீசிய ரியான் பராக்கின் முதல் பந்தினை மஹ்மதுல்லா சிக்ஸர் அடித்தார். அதனால், அடுத்த பந்தினை வித்தியாசமாக மலிங்கா பாணியில் ரியான் பராக வீசினார். இதுமாதிரி கேதர் ஜாதவ்வும் வீசியுள்ளார்.

ஆனால், நோ பால் கொடுக்க காரணம் இந்தப் பாணி கிடையாது. பந்துவீசும் இடதுபுற எல்லைக்கோட்டுக்கு வெளியே காலை வைத்து பந்துவீசியதால் இந்த நோ பால் கொடுக்கப்பட்டது.

எம்சிசியின் 21.5ஆவது விதியின்படி ஒரு பந்துவீச்சாளரின் கால்கள் பந்துவீசும்போது ரிடர்ன் கிரீஸை தொடக்கூடாது என்பது விதி. இதை மீறினால் நடுவரால் நோ -பால் ஆக அறிவிக்கப்படும்.

ரியான் பராக் பேட்டிங்கில் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க பந்துவீச்சில் 2 ஓவர்களுக்கு 16 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT