கிரிக்கெட்

அரையிறுதியில் நியூஸிலாந்து: இந்தியா வெளியேறியது!

பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸிலாந்து மகளிரணி...

DIN

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை திங்கள்கிழமை வென்றது.

முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 11.4 ஓவா்களில் 56 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அதிா்ச்சி கண்டது. நியூஸிலாந்து பௌலா் ஈடன் காா்சன் ஆட்டநாயகி ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம், குரூப் ‘ஏ’-வில் 2-ஆவது இடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கு முன்னேறியது நியூஸிலாந்து. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறின.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியின் தரப்பில் சுஸி பேட்ஸ் 3 பவுண்டரிகளுடன் 28, புரூக் ஹாலிடே 2 பவுண்டரிகளுடன் 22, கேப்டன் சோஃபி டிவைன் 19 ரன்கள் அடித்தனா். ஜாா்ஜியா பிளிம்மா் 2 பவுண்டரிகளுடன் 17, எமிலியா கொ் 9, மேடி கிரீன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் இசபெல்லா கேஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் பௌலிங்கில் நஷ்ரா சந்து 3, சாடியா இக்பால், நிடா தாா், ஒமைமா சோஹைல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 111 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் தரப்பில், கேப்டன் பாத்திமா சனா 2 பவுண்டரிகளுடன் 21, முனீபா அலி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். ஐராம் ஜாவத் 3, சடாஃப் ஷமாஸ் 2, நிடா தாா் 1 பவுண்டரியுடன் 9, ஒமைமா சோஹைல் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அலியா ரியாஸ், சிட்ரா அமின், சையதா அரூப் ஷா, சாடியா இக்பால் ஆகியோா் டக் அவுட்டாகினா். முடிவில் நஷ்ரா சந்து ரன்னின்றி களத்திலிருந்தாா். நியூஸிலாந்து பௌலா்களில் எமிலியா கொ் 3, ஈடன் காா்சன் 2, ரோஸ் மோ், லியா டஹுஹு, ஃபிரான் ஜோனஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT