விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 
கிரிக்கெட்

முழங்கால் காயத்தால் பாதியில் வெளியேறிய ரிஷப் பந்த்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முழங்கால் காயத்தால் பாதியில் வெளியேறினார்.

DIN

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முழங்கால் காயத்தால் பாதியில் வெளியேறினார்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கீப்பிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முழங்கால் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கார் விபத்தின் போது ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயங்களில் இருந்து ரிஷப் பந்த் குணமடைந்துவிட்ட காலில் வீக்கம் இருப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ரிஷப் பந்த்

நியூஸிலாந்து இன்னிங்ஸின் 37வது ஓவரில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் டெவோன் கான்வேக்கு எதிரான ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட பந்த், பந்தை பிடிக்கத் தவறியதால் முழங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “ரிஷப் பந்துக்கு விபத்து ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்த காலில் துரதிருஷ்டவசமாக பந்து நேரடியாக தாக்கியது. காலின் தசைகள் மிகவும் மெதுவானவை. அந்தக் காலில் பந்து தாக்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவர் வெளியேற்றப்பட்டார். அவரது காயங்கள் குணமடைந்ததும் அவர் நாளை களத்திற்கு திரும்புவார்” என்றார்.

முன்னதாக, பெங்களூருவில் நடந்தப் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர், நியூஸிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT