ரிஷப் பந்த்  Shailendra Bhojak
கிரிக்கெட்

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்..! 99 ரன்களில் ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்காக டெஸ்ட்டில் ரிஷப் பந்த் அதிவேகமாக ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் புதிய சாதனையை படைத்துள்ளார். 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார்.

இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்ல் 46க்கு ஆட்டமிழக்க 2ஆம் இன்னிங்ஸில் 90.2ஓவர்களுக்கு 438/6 ரன்கள் எடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டின்போது சின்னசாமி மைதானமே அமைதியில் மூழ்கியது.

ரிஷப் பந்த தனது 12ஆவது அரைசதத்தை வெறுமனே 55 பந்துகளில் அடித்து அசத்தினார்.

2018 முதல் டெஸ்ட் அணியில் இருக்கும் ரிஷப் பந்த் சமீபத்திய கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்தியாவுக்கு அதிவேகமாக 2,500 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர்கள்

ரிஷப் பந்த் - 62 இன்னிங்ஸ்

எம்.எஸ்.தோனி - 69 இன்னிங்ஸ்

ஃபரூக் என்ஜினியர் -82 இன்னிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT