கோப்புப் படம் படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

106 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்; தென்னாப்பிரிக்கா 34 ரன்கள் முன்னிலை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (அக்டோபர் 21) தொடங்கியது.

106 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மஹ்மதுல் ஹாசன் ஜாய் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தைஜுல் இஸ்லாம் 16 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 13 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டேன் பிட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

34 ரன்கள் முன்னிலை

வங்கதேசம் 106 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. அய்டன் மார்க்ரம் (6 ரன்கள்), டோனி டி ஸார்ஸி (30 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (23 ரன்கள்), டேவிட் பெடிங்ஹம் (11 ரன்கள்) மற்றும் ரியான் ரிக்கல்டான் (27 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

கைல் வெரைன் 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT