முகமது ஷமி (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்பது குறித்து...

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் அணியில் இடம்பெற்று விளையாடவில்லை.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு முகமது ஷமி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா?

பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்தும் முகமது ஷமி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: நேற்று நான் பந்துவீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாக பாதி தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீசிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்தேன். ஆனால், நேற்று முழுவீச்சில் வழக்கமாக பந்துவீசும்போது ஓடி வரும் தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டேன்.

எனது பந்துவீச்சு 100 சதவிகிதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனக்கு வலி என்பது 100 சதவிகிதம் இல்லை. நீண்ட நாள்களாக பலரும் நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவேனா அல்லது இடம்பெறமாட்டேனா என்பதை தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT