விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் சாஜித் கான் 
கிரிக்கெட்

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராவ்லி 29 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின் வரிசையில் வந்தவர்களும் அவசரமாக பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். ஆலி போப் 3 ரன்களிலும், ஜோ ரூட் 5 ரன்களிலும், ஹாரி புரூக் 5 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கஸ் அகிட்சன் 39 ரன்னில் வீழ்ந்தார்.

வாஷிங்டன் சுந்தர் 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள்..! நியூசி. 259க்கு ஆல் அவுட்!

பென் டக்கெட் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியை காண்பித்த ஜேமி ஸ்மித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

68.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மிர்பூர் டெஸ்ட்: தெ.ஆ. வரலாற்று வெற்றி..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT