ரோஹித் சர்மா 
கிரிக்கெட்

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி 0 ரன்னில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரது விக்கெட்டை டிம் சவுதி வீழ்த்தினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை நியூசிலாந்து வீரர் டிம் சவுதியிடம் பறிகொடுப்பது இது 14-வது முறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்திய மண்ணில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆவது 9 ஆண்டுகளுக்கு பின்னர் இதுவே முதல் முறையாகும்.

பாக். சுழலில் சிக்கிய இங்கிலாந்து: 267 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தப் போட்டியில் டக் அவுட்டான ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டானவர் என்ற வரிசை 34 முறை டக் அவுட்டான இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக முறை டக் அவுட்டான கேப்டன் என்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தோனி இதுவரை 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்; தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் கருத்து!

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட் ஆனவர்கள்

  • ஜாகீர் கான் -43

  • இஷாந்த் சர்மா -40

  • விராட் கோலி -38

  • ஹர்பஜன் சிங் -37

  • அனில் கும்ப்ளே -35

  • ரோஹித் சர்மா -34*

  • சச்சின் டெண்டுல்கர் -34

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதிர்ப்பு!

இயல்கள் இசங்கள் நிஜங்கள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி)

பேரலையின் சாட்சியம்

அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்

SCROLL FOR NEXT