தென்னாப்பிரிக்க அணி  படம்: எக்ஸ் / புரோட்டியஸ் சிஎஸ்ஏ
கிரிக்கெட்

மிர்பூர் டெஸ்ட்: தெ.ஆ. வரலாற்று வெற்றி..! டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம்!

மிர்பூரில் நடைபெற்றுவந்த முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

DIN

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் மிா்பூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேசம் 307க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 106/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2014க்குப் பிறகு ஆசியாவில் தென்னாப்பிரிக்காவின் முதல் வெற்றி இதுவேயாகும்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தெ.ஆ. அணி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT