படம் | AP
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி; தொடரைக் கைப்பற்றி அசத்தல்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கும், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கைக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 58 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, திமுத் கருணாரத்னே 55 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 50 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளையும், சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6 ஆம் தேதி ஓவலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

வாழ்க்கையை நேசிக்கிறேன்

தனிநபர்: 20 லட்சம் நூல்கள்

”5 வரிகளுக்கே கதறும் பாஜக!” ராகுல் Vs ராஜ்நாத் சிங்! | செய்திகள்: சில வரிகளில் | 02.02.26

SCROLL FOR NEXT