ஷான் மசூத் படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை: பாகிஸ்தான் கேப்டன்

டெஸ்ட் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணி தயாராகவில்லை என அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணி தயாராகவில்லை என அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (செப்டம்பர் 3) நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு தயாராக இல்லை

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இழப்புக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் டெஸ்ட் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணி தயாராகவில்லை என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் தோல்வியிலிருந்து கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு தோல்வியிலிருந்து உடனடியாக முன்னேறிச் செல்ல வேண்டும். டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் தேடாமல், தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். வீரர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என நினைத்து விளையாடியதையும் மறுக்க முடியாது. நாங்கள் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகவில்லை என நினைக்கிறேன்.

வேகப் பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும்

முதல் வேலையாக பாகிஸ்தான் அணி சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

சிறப்பாக விளையாடிய வங்கதேசம்

வங்கதேச வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் அதிக அளவில் தவறுகளை செய்தோம். ஆனால், அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்து. ஆனால், துரதிருஷ்டவசமாக அதனை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT