தனஞ்ஜெயா டி சில்வா (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியுமென இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தெரிவித்துள்ளார்.

DIN

தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியுமென இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேம்படுத்திக் கொள்ள முடியும்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களுக்கு டெஸ்ட் போட்டிகளை வெல்லும் திறன் இருக்கிறது. இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி பெற்றுத் தருகிறார்கள். காலேவில் மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் எப்போதுமே வெற்றி பெற உதவுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் தினேஷ் சண்டிமால் மற்றும் திமுத் கருணாரத்னே இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் எங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் குறித்து பேசப்படுகிறது. இலங்கை அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் குறைந்த அளவிலான சராசரியை வைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில், நாங்கள் கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் பந்துவீசுவேன் என எதிர்பார்க்கவில்லை. ரமேஷ் மெண்டிஸுக்கு பந்துவீச்சு கைகொடுக்காததால், அணிக்காக பந்துவீசினேன் என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT