யுவராஜ் சிங்  படம் | யுவராஜ் சிங் (எக்ஸ்)
கிரிக்கெட்

2007 ஆஸி. தொடரில் பிரபல நடிகையுடன் டேட்டிங்..! ரகசியம் பகிர்ந்த யுவராஜ் சிங்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்ததாகக் கூறியுள்ளார்.

DIN

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்ததாகக் கூறியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்கள் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சிறந்த ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங் டி20 போடியில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடித்து பிரபலமானார்.

பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். ஹேசல் கீச் என்பவருடன் 2016இல் திருமணம் செய்தார். ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தை இருக்கிறார்கள்.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் யுவராஜ் சிங் பேசியதாவது:

2007 ஆஸி. சுற்றுப்பயணத்தின்போது நான் ஒரு பிரபல நடிகையை டேட்டிங் (இணை பழகல்) செய்தேன். அந்த நடிகை அப்போது மிகவும் பிரபலமான அனுபவமிக்க நடிகை. அவரது பெயரை சொல்லமாட்டேன். அவருக்கு அடிலெய்டில் படப்பிடிப்பு இருந்தது. கொஞ்ச காலம் நாம் சந்திக்க வேண்டாம் ஏனெனில் நான் ஆஸி. தொடரில் இருக்கிறேன், நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றேன்.

ஆனால், அந்த நடிகை பேருந்தில் என்னைப் பின் தொடர்ந்து கான்பெரா வரைக்கும் வந்தார். அந்த 2 டெஸ்ட்டிலும் என்னால் போதிய ரன்கள் குவிக்க முடியவில்லை. இங்கு என்ன செய்கிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘உன்னிடம் நேரம் செலவளிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

பின்னர், இரவு சந்தித்து பேசினோம். உனது பணியில் நீ கவனம் செலுத்த வேண்டும். நானும் எனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நான் ஆஸி. தொடரில் இருக்கிறேன். அதன் முக்கியத்துவம் பற்றி புரிந்துகொள். பின், கான்பெராவிலிருந்து அடிலெய்டிக்கு மாறினோம். அப்போது அவர் எனது துணிகளை பேக்கிங் செய்தார். அதில் எனது காலணிகளை அவரது பையில் வைத்து பேக்கிங் செய்துவிட்டார்.

அடுத்து அவரது பிங்க் நிற காலணிகளை அணிந்துதான் நான் விமான நிலையத்துக்கு சென்றேன். சக வீரர்கள் அனைவரும் என்னைப் பார்த்து கை தட்டி சிரித்தார்கள். விமான நிலையத்தில் புதிய செருப்பு வாங்கி அணியும்வரை அதைத்தான் அணிந்திருதேன் என சிரிப்புடன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT