கான்பூர் மைதானம் மழையினால் மூடப்பட்டது.  படம்: எக்ஸ் / பிசிசிஐ
கிரிக்கெட்

கான்பூர் டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து!

வங்கதேசத்து எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது.

DIN

வங்கதேசம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் டெஸ்ட்டில் சென்னையில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பூரில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 35 ஓவர் முடிவில் 107/3 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

பின்னர் மழை அதிகரிக்கவே முதல்நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

வங்கதேசம் ஸ்கோர் கார்டு

ஜாகிர் ஹசன் - 0

ஷத்மன் இஸ்லாம் - 24

நஜ்முல் ஹொசன் ஷண்டோ - 24

மொமினுல் ஹக் - 40 *

முஷ்பிகுர் ரஹிம் - 6 *

இந்தியாவின் பந்துவீச்சு

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் ரவி அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

ஏற்கனவே இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

SCROLL FOR NEXT